திமுக & அதிமுக இரண்டும் த.வெ.க வை எதிர்க்கும் இடத்திற்கு நகர்ந்து விட்டன
தன்னுடைய கூட்டனிக்கு விஜய் வந்து விடுவார் என்று பகல் கனவு கண்ட எடப்பாடிக்கு விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு பலமான ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
ஒரு புதிய கட்சி வரும் போது இரண்டு பெரிய ஊழல் கட்சிகளுடன் கூட்டனி வைக்கவே கூடாது என்பது தான் மக்கள் விருப்பமும் கூட அதன்படி விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு விஜய்க்கு மிகப்பெரிய பலம்
இந்த 2026 தேர்தலில் ஆட்ட நாயகன் விஜய் மட்டுமே, இரண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் ஒரு கடுமையான போட்டியாளர் விஜய் மட்டுமே.
திமுக அதிமுக இரண்டும் சொல்லுன் 200 தொகுதி வெற்றியானது சாத்தியமாகது, விஜய் அதை சிதைத்துள்ளார் களத்தில் விஜய் தான் எதிர்கட்சியாக செயல்படுகிறார் என்ற ஒரு தாக்கத்தை திமுகவே உருவாக்கி விட்டது.
விஜய் மீதான பயம் முதல்வரின் சமீப கால பேச்சுகளில் பட்டவர்த்தனமாக தெரிகிறது அது போக உதயநிதியின் பேச்சும் சூசமாக விஜயை நோக்கி இருந்தது.
2026 இல் ஆட்ட நாயகன் விஜய் மட்டுமே