சனநாயக அமைப்புகளின் தலைமைகள், தோழமைகள் பங்கேற்க 'தேர்தல் ஆணையத்தின் சனநாயக விரோத போக்கினை கண்டித்த போராட்டம் தொடங்குகிறது. மிகக்குறைந்த காலகட்டத்திற்குள்ளான அழைப்பினை ஏற்று தோழமைகள் பங்கெடுக்க ஆதரவளித்தது பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
SIR என்பது அடிப்படை உரிமையை பறிக்கும், பாஜகவின் திட்டமிட்ட நடவடிக்கை. மோடியின் கருப்பு பண ஒழிப்பை போல ஏமாற்றுவித்தை. இதற்கு எதிராக மிகப்பெருமளவில் மக்களை திரட்ட வேண்டிய கடமை நமக்குள்ளது. அவ்வகையில் இப்போராட்டம் தொடக்கப் போராட்டமே.
நவ-10, திங்கட்கிழமை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சிங்காரவேலர் மாளிகை- Beach Station, Near Parrys Corner) அருகில் பிற்பகல் 2:30க்கு தொடங்குகிறது. இந்த இடத்தில் ஒன்றிணைந்து,
தலைமை செயலகத்திற்குள் இயங்கும் தேர்தல் ஆணையரின் அலுவலகம் நோக்கிய முற்றுகை போராட்டத்தை நடத்துகிறோம்.
திங்கட்கிழமை அலுவலக நேரம் என்றாலும், இப்போராட்டம் வரலாற்று தேவையாக உருவெடுத்துள்ளது. அரைநாள் விடுப்புகளை எடுத்தாவது நாம் பங்கேற்க வேண்டிய கடமை நமக்குள்ளது.
வாக்குரிமை காக்க ஒன்றிணைவோம்!