'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்று போற்றும் தமிழ் மக்களுக்கான தனி மொழிவாரி மாநிலமான நம் மாநிலம் பிறந்த நாள் இன்று. இதற்காகப் போராடிய எல்லை போராட்ட வீரர்களையும், தமிழ் மொழி தனித்துவத்திற்காக குரல் கொடுத்த தியாகிகளையும் இந்நாளில் நினைவுகூருவோம். மதராஸ் மாகாணம் என்று அறியப்பட்ட இந்த தமிழர் நிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர்சூட்டி மகுடம் அணிவித்தார் தமிழக அரசியலின் தலைமகன் பேரறிஞர் அண்ணா.
நம் தமிழ்நாட்டின் அடையாளமான சுயாட்சி சிந்தனைகள், இருமொழிக் கொள்கை, மதநல்லிணக்க அரசியல், மாநில உரிமைகள் ஆகியவற்றை மீட்டெடுப்போம். மக்கள் விரோத, கபட நாடக திமுக-விடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம். 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்று தமிழ்நாடு நாளான இன்று உறுதியேற்போம்!
Nov 1, 2025 · 8:40 AM UTC








